ஜப்பானின் அய்ச்சி – நகோயா நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மூன்று போட்டிகளில் வென்று வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறார்.
4X400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம். நான்கு பேர் கொண்ட இந்திய மகளிர் அணியில் வித்யா ராம்ராஜ் இடம் பெற்று தங்கம் வென்றுள்ளார். இதில் இவருடைய கடைசி நிமிட ஓட்டம் மிக முக்கியமான பங்கை வகித்தது.
ஏற்கெனவே கலப்பு 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளி வென்ற இந்திய அணியிலும் வித்யா இடம்பெற்றிருந்தார்.
பெண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் 54.75 விநாடிகளில் இலக்கை அடைந்து வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார் வித்யா ராம்ராஜ்.















Add Comment