சர்வதேசக் கால்பந்துப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார் லியோனல் மெஸ்ஸி. ஸ்பெயினுடன் ஆடிய உலகக்கோப்பை இறுதிப்போட்டியே அவர் அர்ஜெண்டினாவுக்காக ஆடிய கடைசிப் போட்டி. இந்த ஓய்வை அறிவிக்கையில் நிச்சயமாக ஒரு நிறைவான மனநிலையில் இருந்திருப்பார்.
அர்ஜெண்டினா தேசிய அணிக்காக விளையாடிய மெஸ்ஸி பல கோப்பைகளை வென்றிருக்கிறார். சென்ற 2022ஆம் ஆண்டு வென்ற உலகக்கோப்பை அதில் முக்கியமானது. அமெரிக்கக் கண்டத்தின் உயரிய தொடரான ’கோப்பா அமெரிக்கா’வை மெஸ்ஸியின் காலத்தில் இருமுறை வென்றிருக்கிறது அர்ஜெண்டினா.
ஆனாலும், இந்த முக்கிய வெற்றிகளைப் பெறுவதற்கு முன் ஆகக் கடினமான சூழல்களையும் மெஸ்ஸி தாண்டி வர வேண்டியிருந்தது. இருபத்தொன்பது வயதிலேயே மனமுடைந்து ஓய்வை அறிவித்து, பின் அதிலிருந்து மீண்டு வந்தார் மெஸ்ஸி. அர்ஜெண்டினா பெற்ற இந்த மூன்று கோப்பைகளும் அதன் பின்னர் வென்றவைதான்.
















Add Comment