Home » 24- இருபத்து இரண்டு
24 • தொடர்கள்

24- இருபத்து இரண்டு

24

அக்னியும் குறிப்பேடும் காடுகளும்

(சே குவேரா)

பொலிவியாவின் ‘நான்காஹுவாசு’அடர்ந்த காட்டுப்பகுதி. அதிகாலைப் பொழுது. அடர்ந்த மரக்கிளைகளின் ஊடே சூரியனின் முதல் கதிர் வீச்சு படர ஆரம்பித்தது. அதற்கு முன்பே, இரு மரங்களுக்கு இடையே கட்டப்பட்டிருந்த தொங்கு ஊஞ்சலில் இருந்து விழித்தெழுந்தார் சே குவேரா.

காட்டின் ஈரமான குளிர் காற்று நுரையீரல் வரை இறங்க, கடும் ஆஸ்துமா மூச்சுத்திணறல் அவரது நெஞ்சைப் பிழிந்தது. சத்தமாக இருமினால் மற்றவர்களுக்குத் தொந்தரவாக இருக்கும் என்பதால் இருமலைக் கட்டுப்படுத்தினார். தோள் பையிலிருந்த இன்ஹேலரை எடுத்து ஆழமாக உறிஞ்சினார். பத்து நிமிடங்களுக்குப் பிறகே அவரது மூச்சு இயல்புநிலைக்குத் திரும்பியது.

பாயிலிருந்து இறங்கி, தரை மீது பரவியிருந்த பனித்துளிகளில் காலடிகளைப் பதித்தார். தனது எம்2 கார்பைன் துப்பாக்கியின் பாகங்களைக் கழற்றி, எண்ணெய்த் துணியால் துடைத்துச் சுத்தப்படுத்தினார். தோளில் தோட்டாக்களை மாட்டியபடி அன்றைய நாளின் கொரில்லாப் போர்ப் பணிகளைத் தொடங்கினார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!