‘நகையே அழுகை இளிவரல் மருட்கை அச்சம் பெருமிதம் வெகுளி உவகை’. இது தொல்காப்பியம். எட்டுவிதமான மெய்ப்பாடுகளைப் பட்டியலிடுகிறது.
மெய்ப்பாடுகள் என்பன உள்ளத்தில் எழும் உணர்வுகள். உடலின் வழியாக வெளிப்படுவன. புரியும்படி சொன்னால் ‘எமோஷன்ஸ்’.
மனிதகுலம் இரட்டை இன்ஜின்களால் இயக்கப்படுகிறது. ஒன்று அறிவு. மற்றது உணர்வு.
அறிவு இப்போது வேகமாக ஆட்டோமேட் ஆகி வருகிறது. செயற்கை நுண்ணறிவு செய்து கொண்டிருக்கும் ஜாலங்களை நாம் அனுதினமும் காண்கிறோம்.
அறிவை ஒரு கடைச்சரக்கு போல வாங்கும் நிலை. அப்படியென்றால் உணர்வுகளின் நிலை? அவற்றைத்தான் இந்தக் கட்டுரையில் பார்க்கவிருக்கிறோம்.















Add Comment