‘இந்தப் புகைப்படத்தில் இருக்கும் நபரை 1990களின் திரைப்படக் கதாநாயகியைப் போன்று மாற்று. விடியலின் பொன்னிற ஒளியைப் புகைப்படத்தில் மிதமாகப் பாய்ச்சு.’
செய்யறிவுச் செயலி: படம் உருவாகிவிட்டது.
‘தலையில் மல்லிகைப் பூவைச் சொருகு.’
செய்யறிவுச் செயலி: சொருகியாகிவிட்டது.
‘மல்லிகைப்பூ வேண்டாம். ரோஜா பூவைச் சொருகு. இதைக் காணொளியாக மாற்று. ட்யூட் திரைப்படத்திலிருந்து அலையவ கலையவ பாடலைப் பின்னணியில் ஓடவிடு.’
சில நாட்களுக்கு முன்பு, மேற்படி பிராம்ட்களால் கூகுள் தரவு நிலையங்களை (Data centers) நாம் அலறவிட்டது நினைவிருக்கலாம்.















Add Comment