83 அடையாளம்
வீட்டின் மேல் ஒளிவெள்ளம் பாயும்படி கொஞ்சம் முன்னால் டிரைக்கை நிறுத்தினார் ராஜேந்திரன்.
வண்டிச் சத்தம் கேட்டதும் எட்டிப் பார்த்த பெரியவர் வெளிச்சத்துக்கு மறைப்பாகக் கையை வைத்துக் கொண்டிருந்தார்.
இன்ஜின் ஓடிக்கொண்டிருக்க, ‘இந்தப் பெரியவரைத் தான சொன்னீங்க‘ என்று அமரிக்கையாகக் கேட்டார் ராஜேந்திரன்.
‘ஆமா‘ என்றான் ஆச்சரியம் தாளாமல்.
‘சின்ன வெடம். இங்க எல்லாரையும் தெரியும். இவங்களாச்சும் விண்ட்டர்ல டங்மர்க் போயிடுவாங்க. நாம்ப ரெண்டு மூணு வருசம் இங்கையே இருக்கமில்ல. அதனால எல்லாரையும் தெரியும். நீங்க பெரியவர்னு சொன்னபோதே இவராத்தான் இருக்கணும்னு நெனச்சேன்.’















Add Comment