Home » சக்கரம் – 80
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 80

80 இண்டியா

வைஷ்னோ தேவியில் தூரத்தில் தெரிந்த மலைகளில் ஒன்றின் அடிவாரத்தில் நின்றுகொண்டிருப்பதான நினைப்பில் மனம் விம்மிற்று. அதிலும் தன்னந்தனியாக நிற்கிறோம் என்கிற நினைப்பே தூக்கி உச்சியில் வைக்கப் போதுமானதாக இருந்தது. உருட்டிக்கொண்டு மேலே செல்லப் பாறாங்கல் இல்லையென்றாலும் நாம் கூட சிசிஃபஸ்தான் என்று எண்ணிக்கொண்டான். இதன் மீது ஏறியாகவேண்டும் என்பதே பிரமிப்பாகத்தான் இருந்தது. ஆளரவமில்லை. இங்கு வந்ததே இதற்காகத்தானே. பாரத் ஜோடோ கும்பல் மட்டுமில்லை ஈ காக்கை இல்லை என்பது கொஞ்சம் அதிகப்படியோ. உள்ளூர லேசான பயம் தோன்றி ஒருவேளை தவறு செய்துவிட்டோமோ என்கிற குற்றவுணர்வை உண்டாக்கிற்று.

ஆரம்பத்தில் சாலையின் அழுக்குப் படிந்திருந்தாலும் பார்த்த இடமெங்கும் அப்பழுக்கற்ற ஐஸாக இருந்தது அந்த இடம். சினிமாவில் தவிர நேரில் கண்டதில்லை என்பதில் மனம் துள்ளிக் குதித்தது. தான் மட்டுமே அனுபவிக்கிறோம் என்பதும் தனக்கு மட்டுமே இது கிடைத்திருக்கிறது என்பதையும்விட தன்னை மட்டுமே பிரதானமாக நினைப்பவனை வேறு எது சந்தோஷப்படுத்திவிடும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!