84 நினைவுகள்
சுதீர் சுஜாதா போல முன்பே கிளம்பிவிட்ட விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய சிலரைத் தவிர அத்தனைப்பேரும் ஜம்மு ரயில் நிலையத்தில் குழுமியிருந்தனர். ஒவ்வொருவர் பெயராக உரக்கச் சொல்லி சிவப்புக்கும் ரோஸுக்கும் இடைப்பட்ட நிறத்திலிருந்த ரயில்வே பாஸ்களை விநியோகித்துக்கொண்டிருந்தான் அத்துல். அரசால் செய்யமுடிந்த அதிகபட்ச மரியாதை.
நான்கு மாதங்கள் ஓட்டிய சைக்கிளை அவரவரே வைத்துக்கொள்ளுங்கள் என்ற பெரிய மனத்துடன் கொடுக்கலாம்; முக்கியமான ஞாபகார்த்தமாக இருக்கும் என்று ரேலி ஜம்முவில் நிறைவடைந்தது முதலே கேட்கத் தொடங்கிய முணுமுணுப்பு அங்கும் கடைசி கடைசியாகத் தாழ்ந்த குரலில் ஒலித்துக்கொண்டிருந்தது. செலவழித்துக் கொண்டுவந்த சைக்கிளே போய்விட்டாலும் – நசுங்கிக் கிடந்த அந்தத் தருணத்தில் ஏற்பட்ட வருத்தத்தைத் தாண்டி அதைப் பற்றிய நினைவே இல்லாமல் மீதிக் காலத்தை ஓட்டி முடித்த இவனுக்கு அதைக் கேட்டுச் சிரிப்புதான் வந்தது. நினைவுகளை விடவா நினைவுப் பொருட்கள் முக்கியம். அனைத்தையும் பொருளால் மட்டுமே அளக்க முடிகிற உலகம்.















Add Comment