Home » சக்கரம் – 79
இலக்கியம் • சக்கரம் • நாவல்

சக்கரம் – 79

79 விலங்கு

நான்கு மாதங்களாய் நாலு நாலரைக்கு எழுந்துவிடும் கூட்டம், செய்ய ஒன்றுமில்லை என்பதால் நம்மைப்போல நெடுநேரம் கழித்தே அன்று எழுந்திருக்கும் என்று விழிப்பு வந்த பின்பும்  சோம்பலாய் கண்களை மூடிப் படுத்திருந்தவன், எவ்வளவு நேரம்தான் இப்படியே இருப்பது என்று போரடிக்கவும் எழுந்து உட்கார்ந்தான். ஏழெட்டு பேருக்கு மேல் படுத்திருந்த அறை காலியாய் இருந்தது. இரவு, ஜேக்கப் நல்லித்தானமும் அவனோடு ஜேம்ஸ் ரோஜி ஆண்டனி என்று எப்போதும் கும்பலாகவே திரிகிற மலையாளிகளும் அந்த அறையில் தான் வந்து படுத்தார்கள்.

ஜன்னலில் தெரிந்த வானம் மழை அடித்து விளாசப்போகிறது என்கிறபடி கருகும்மென்று இருந்தது. ஜன்னல் கண்ணாடியில் ஒட்டியிருந்த துளிகள் ஏற்கெனவே மழை அடித்துப் பெய்திருப்பதைத் தெரிவித்தன. குளிர் காரணமாக ஊரே கொஞ்சம் சோம்பலாகத்தான் இருக்குமோ. யார் எப்படி இருந்தால் என்ன என்று எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கிற மலையாளிகள் அடித்துப் பிடித்துக்கொண்டு ஊரைச் சுற்றிப்பார்க்கக் கிளம்பிவிட்டிருக்கவேண்டும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!