Home » ஒரு ‘சம்பிரதாய’ மரண தண்டனை
உலகம்

ஒரு ‘சம்பிரதாய’ மரண தண்டனை

பஸர் அல்-அஸாத்

ஆகஸ்ட் 11ஆம் தேதியன்று சிரியாவின் இட்லிப், டமாஸ்கஸ் நகரங்களின் வீதிகளில் கூடிய மக்கள், இனிப்புகளைப் பரிமாறிக் கொண்டிருந்தனர். அவர்கள் பதினைந்து வருடங்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த நீதி இப்போது கிடைத்திருப்பதன் வெளிப்பாடுதான் இந்தக் கொண்டாட்டங்கள்.

தேசத்தைச் சீரழித்து, மக்களைக் கொன்று குவித்த சர்வாதிகாரியான பஸர் அல்-அஸாத்துக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கியிருந்தது சிரியாவின் குற்றவியல் நீதிமன்றம்.

பஸரின் சகோதரர் மஹர் அசாத், அவருக்கு உறவினரும் முந்தைய ஆட்சியில் பாதுகாப்பு அதிகாரியாகப் பணியாற்றியவருமான நஜிப், அசாத் ஆட்சிக்கால அதிகாரிகள் எனப் பலருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

சிரியாவில் மட்டுமல்லாது துருக்கி, ஐரோப்பிய தேசங்களில் அகதிகளாக வசிக்கும் சிரியர்களும் இந்த முடிவை வரவேற்றுக் கொண்டாடியிருக்கின்றனர். அசாத் அரசால் கைது செய்யப்பட்டு, இதுவரை என்னவானார்கள் என்றே தெரியாமல் தொலைந்துபோன தங்கள் உறவினர்களின் படங்களை ஏந்தி ஊர்வலமாகச் சென்றனர். இது ஒருவகையில் அவர்களுக்கான அஞ்சலி.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!