Home » குழம்புவதும் குழப்புவதும் எமக்குத் தொழில்
உலகம்

குழம்புவதும் குழப்புவதும் எமக்குத் தொழில்

ஜெனரல் அகமது ஷெரீப் சௌத்ரி

அண்மையில் பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தித்தொடர்பாளரும் இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (ISPR) அமைப்பின் தலைமை இயக்குநருமான (DG), லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சௌத்ரி ஒரு செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றினார். ‘அஞ்சேல், பாகிஸ்தான் பாதுகாப்பாகத்தான் இருக்கிறது’ என்பதுதான் அந்த உரையின் ஒருவரிச் செய்தி. பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரில் பாகிஸ்தானை எதிர்த்துப் போராட்டங்கள் நடந்துவரும் நிலையில் இச்சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இந்த உரையை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து ஆராய்ந்தால் பல சுவாரஸ்யமான புரிதல்களைப் பெறலாம்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க, இந்தியா ஆபரேஷன் சிந்தூரை மேற்கொண்டதை அறிவோம். அச்சமயத்தில், அமிர்தசரஸ் தங்கக்கோவிலுக்கு அருகில் டிரோன் தாக்குதலை நிகழ்த்தியது பாகிஸ்தான். அதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது. அப்போது களமிறங்கிய சௌத்ரி, சீக்கியர்களைக் குறிவைத்து அந்தத் தாக்குதலை நடத்தியதே இந்தியாதான் என்றார். ஒருவரும் நம்பவில்லை.

தன்னுடைய பொய்க்கு வலுசேர்க்க எண்ணி அடுத்த பொய்யைச் சொன்னார் அவர். அமிர்தசரஸ் தாக்குதலைத் தொடர்ந்து, ஆஃப்கனிஸ்தானையும் இந்தியா தாக்கியதாகக் கூறினார். அந்தக் குற்றச்சாட்டையும் இந்தியா மறுத்தது ஒருபுறம் இருக்கட்டும். அவரது கெட்ட நேரத்துக்கு, ஆஃப்கனிஸ்தானே அதை மறுத்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!