பெர்முடா. பல நூற்றாண்டுகளாகக் கப்பல்களையும் விமானங்களையும் விழுங்கியதாக அஞ்சப்படும் கடல் பகுதி இது. என்ன காரணம் என்று பல விவாதங்கள் நடந்தன. ஆனால் ஆராய்ச்சியாளர்களால் ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியவில்லை. தற்போது பெர்முடா தீவின் அடிப்பகுதியில் ஒரு புதிய புவியியல் கட்டமைப்பை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது அந்தப் பிராந்தியத்தின் மர்மத்தை விளக்குவதற்கான ஒரு புதிய தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.
மேற்கத்திய அட்லாண்டிக் கடலில் உள்ள மையாமி, பெர்முடா தீவு, புவேர்ட்டோ ரிக்கோ ஆகிய மூன்று இடங்களையும் கோடுகளால் இணைத்தால் உருவாவது பெர்முடா முக்கோணம். சுமார் 5,00,000 சதுர மைல் பரப்பளவைக் கொண்ட இந்தப் பிரதேசம்தான் உலக வரைபடத்தின் மிக ஆபத்தான பகுதியாகக் கருதப்படுகிறது. அப்படி என்னதான் மர்மம் இந்த ‘சாத்தானின் முக்கோணத்தில்’?
இந்த மரணப் பிரதேசத்தின் விசித்திரங்களை 1492ஆம் ஆண்டிலேயே முதன்முதலில் தன் பயணக்குறிப்பில் நடுக்கத்தோடு பதிவு செய்துள்ளார் கிறிஸ்டோஃபர் கொலம்பஸ்.















Add Comment