Home » மரணத்தை மீறிய வாக்குறுதி
உலகம்

மரணத்தை மீறிய வாக்குறுதி

ஷேக் ஹசீனா

பங்களாதேஷின் தெருக்களில் ஒருகாலத்தில் அவரது படம் இல்லாத சுவரே இல்லை. இன்று அதே சுவர்களில் அவரது உருவப்படங்கள் கறுப்பு மையால் அழிக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளன. டாக்காவின் மையத்தில் இருந்த அவரது சொந்த இல்லம் இன்று ஒரு நினைவுக் காட்சியகமாக மாற்றப்பட்டு, அவரது ஆட்சிக்காலத்து அடக்குமுறைகளை ஆவணப்படுத்தும் சாட்சியாக இருக்கிறது.

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பங்களாதேஷை ஆண்ட பெண்மணி ஷேக் ஹசீனா. இன்று தன் சொந்த நாட்டால் தேசத் துரோகி என முத்திரை குத்தப்பட்டு, தூக்கு தண்டனைக்கு உள்ளாகியிருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மாணவர் புரட்சியால் பதவியிழந்தார் ஹசீனா. உயிர் தப்பிக்க இந்தியாவுக்கு ஓடிய அவர், இப்போது தன்னை மரண தண்டனைக்கு உட்படுத்திய அதே தாயகத்துக்கு இந்த ஆண்டு டிசம்பரில் திரும்புவதாக அறிவித்திருக்கிறார்.

பாகிஸ்தானிடமிருந்து பங்களாதேஷைப் பிரித்துத் தனி நாடாக உருவாக்கிய தலைவர் ஷேக் முஜிபுர் ரஹ்மான். ‘பங்கபந்து’ (வங்காளத்தின் நண்பன்) என மக்களால் அழைக்கப்பட்ட அவர், பங்களாதேஷின் முதல் அதிபர் ஆவார். அவரது மகள்தான் ஷேக் ஹசீனா.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!