Home » கொழும்பு சர்வதேசப் புத்தகக் காட்சி – நேரடி ரிப்போர்ட்
புத்தகக் காட்சி

கொழும்பு சர்வதேசப் புத்தகக் காட்சி – நேரடி ரிப்போர்ட்

‘ஒவ்வோர் ஆண்டும் ஆர்வத்துடன் புத்தகக் காட்சிக்கு வருபவர்களில் நானும் அடக்கம். என் வீட்டு அலமாரியில் புத்தகங்கள் நிறைந்திருக்கின்றன. இப்போது புத்தகம் படிப்பதற்கான நேரமும் குறைவாக இருக்கிறது. ஆனாலும் இந்த உத்தியோகப்பூர்வ நிகழ்வுக்கு அப்பால் நானும் புத்தகங்களை வாங்குவதற்குத் தனிப்பட்ட முறையில் இந்த ஆண்டும் புத்தகக் காட்சிக்கு வருவதற்கே எதிர்பார்க்கிறேன்.’

இலங்கையின் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, 2026ஆம் ஆண்டுக்கான கொழும்பு சர்வதேசப் புத்தகக் காட்சியை ஆரம்பித்து வைத்து ஆற்றிய உரையின் ஒருபகுதி இது. நாட்டின் அரசத் தலைவர் தனக்கும் புத்தகங்களுக்கும் இருக்கும் நெருக்கத்தைப் பற்றிச் சொல்லியிருப்பது, நிச்சயமாக வாசிப்பை விரும்புவோருக்கு ஊக்கமும் உத்வேகமும் தரக்கூடியது.

சென்ற வருடப் புத்தகக் காட்சியில் புத்தகங்கள் மீதான பெறுமதி சேர் வரியை (VAT) நீக்க வேண்டும் என்ற கோரிக்கையைப் பிரதானமாக வலியுறுத்தி இருந்தனர். புத்தகக் காட்சியை இம்முறை ஆரம்பித்து வைப்பதற்காகக் கிளம்பிய பிரதமரிடம் அதிபர் இது குறித்து விசேடமாகத் தகவல் சொல்லி அனுப்பிவைத்திருக்கிறார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!