Home » ஈரோடு புத்தகத் திருவிழா ரவுண்ட்அப்
புத்தகக் காட்சி

ஈரோடு புத்தகத் திருவிழா ரவுண்ட்அப்

ஈரோடு புத்தகத் திருவிழா, ஜூலை 13 தொடங்கி ஆகஸ்ட் 11 வரை நடைபெற்றது. கோவை புத்தகக் காட்சி நடக்கும் கொடிசியா வளாகம் போல, விழா நடந்த சிக்கய அரசு கலை அறிவியல் கல்லூரியும் நகரத்துக்குச் சற்று வெளியே உள்ளது. ஆனால் ஈரோட்டில் பன்னிரண்டு நாள்களும் திருவிழாதான். மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. வாடகை கார்களில் நிறைய பேர் வந்தனர். இந்த அளவுக்கு வாசகர்கள் வருகை தரக் காரணம், கண்காட்சியை நடத்தும் மக்கள் சிந்தனைப் பேரவையின் திட்டமிட்ட ஒருங்கிணைப்பு.

ஒவ்வொரு ஆண்டும் ஈரோடு புத்தகக் கண்காட்சியில் புதிதாக ஏதாவது நடைமுறைப்படுத்துவார்கள். அடுத்தடுத்த ஆண்டுகளில் அது தொடரும். இவ்வாண்டு வயோதிகர்களுக்கும், நடக்க முடியாதவர்களுக்கும் சக்கர நாற்காலி ஏற்பாடு செய்திருந்தார்கள். அவர்கள் அரங்குகளைச் சுற்றிப் பார்க்கத் தன்னார்வலர்கள் உதவினார்கள்.

சிந்துவெளி பண்பாட்டுக் கண்காட்சிக்காகத் தனியாக ஓர் அரங்கம் அமைத்திருந்தார்கள். அம்மக்கள் பயன்படுத்திய பொருள்களைக் காட்சிக்கு வைத்திருந்தார்கள். அது சம்பந்தமான புத்தகங்களையும் விற்பனைக்கு வைத்திருந்தார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!