டென்மார்க்கில் மார்ச் 24ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது. இங்கே நாம் சமையல் எரிவாயுத் தட்டுப்பாட்டுக்கு நடுவே தேர்தல் அறிக்கைகளிலும் பரப்புரைகளிலும் மும்முரமாக இருந்த வேளையில், டென்மார்க் மக்கள் தங்கள் பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக வாக்களித்தனர்.
டென்மார்க்கில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறும். அதில் வெற்றிபெறும் கட்சியின் தலைவரை டென்மார்க் மன்னர் அரசமைப்பதற்காக முறைப்படி அழைப்பார். நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 179 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில், இடதுசாரிகளுக்கும் இல்லாமல், வலதுசாரிகளுக்கும் இல்லாமல் மக்கள் வாக்குகளைக் கலந்துகட்டி வழங்கியுள்ளனர்.
இப்போது அங்கே ஆட்சியில் இருப்பது சோசியல் டெமோக்ராடிக் கட்சி. 38 இடங்களில் வென்று 21.9% வாக்கு சதவீதத்தைப் பெற்றுள்ளது. கடந்த நூற்றிருபது ஆண்டுகளில் அக்கட்சி பெற்ற மிகக் குறைந்த வாக்கு விகிதம் இது.















Add Comment