Home » டென்மார்க் : ஒரு நாடும் சில விதிமுறைகளும்
உலகம்

டென்மார்க் : ஒரு நாடும் சில விதிமுறைகளும்

டென்மார்க்கில் பதினைந்து வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் பிரதமர் மெட்டே பிரெடெரிக்சன் கடந்த செவ்வாய்க்கிழமை டென்மார்க் நாட்டு நாடாளுமன்ற (போல்கெட்டிங்) கூட்டத்தில் பேசினார்.

‘அறுபது சதவிகிதம் இளம் வயதினர் தங்களது ஓய்வு நேரங்களில் நண்பர்களைச் சென்று சந்திப்பதில்லை, 94% மாணவர்கள் ஏழாம் வகுப்பிலிருந்தே சமூக வலைத்தளங்களில் சொந்தக் கணக்குகளை வைத்திருக்கின்றனர். கைப்பேசிகளும், சமூக வலைத்தளங்களும் நம் பிள்ளைகளின் குழந்தைப் பருவத்தைப் பாதிக்கிறது’ என்றார். இந்த விதிமுறை அடுத்த சில மாதங்களில் முழுவதுமாகச் செயல்பாட்டுக்கு வரும் என்று அறிவித்துள்ளார்.

வடஐரோப்பிய நாடான டென்மார்க், 9-11 நூற்றாண்டுகளில் வைகிங்குகளின் நிலம். கடல் பயணம், கப்பல் கட்டுமானத்தில் கில்லாடிகளான வைக்கிங்குகள் மூர்க்கமானவர்கள். ஆனால் இன்றைய டென்மார்க் மக்கள் வேலை-வாழ்க்கைச் சமநிலை, பாதுகாப்பு, சமூக முன்னேற்றம் என மகிழ்வான எதிர்காலத்தை முன்வைத்துச் செயல்படுகிறார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!