தென் அமெரிக்கக் கண்டத்தில் இருக்கும் ஒரு சிறிய தீவு நாடு க்யூரசோவ். மக்கள்தொகை இரண்டு லட்சத்துக்கும் குறைவு. கால்பந்து வரலாற்றிலேயே இவ்வளவு சிறிய நாடு பங்கு பெறுவது இதுவே முதல்முறை. ஆனால் உலகின் மக்கள்தொகையில் முதலிடம் வகிக்கும் இந்தியா இப்போட்டிக்குத் தேர்வாகவே இல்லை.
இதுபோல ஏராளமான சுவாரசியத் தகவல்கள் இந்த FIFA 2026 கால்பந்து உலகக் கோப்பையில் நிறைந்திருக்கின்றன. இவ்வருடக் கால்பந்து திருவிழாவைப் பற்றி முக்காலமும் ஆராய்வோம் வாருங்கள்.
நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் கால்பந்து உலகக் கோப்பை, இந்த வருடம் ஜூன் 11 முதல் ஜூலை 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 104 போட்டிகள். ஒரு குழுவுக்கு நான்கு அணிகள் விதம் பன்னிரண்டு குழுக்களாகப் பிரிந்து விளையாடுவார்கள். நான்கு நாடுகள் முதல்முறையாக உலகக் கோப்பையில் இந்த வருடம் பங்கு பெறுகின்றன.















Add Comment