Home » வைஷாலி: புதிய சதுரங்க ராணி!
விளையாட்டு

வைஷாலி: புதிய சதுரங்க ராணி!

வைஷா

சென்னைவாசி ரமேஷ்பாபு வைஷாலி, சைப்ரஸ் நாட்டில் இவ்வருடம் மார்ச்-ஏப்ரலில் நடந்த மகளிர் கேண்டிடேட்ஸ் சதுரங்கப் போட்டியில் முதலிடம் பெற்று, இவ்வாண்டு இறுதியில் உலக மகளிர் சாம்பியன் பட்டத்துக்காக மோதும் தகுதியைப் பெற்றிருக்கிறார்.

இருபத்தி நான்கு வயதான வைஷாலி, கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற நான்கே இந்திய மகளிரில் ஒருவர். (கொனெரு ஹம்ப்பி, துரோணவல்லி ஹாரிகா, திவ்யா தேஷ்முக் ஆகியோர் மற்ற மூவர்.) 2024இல் அரசாங்கத்தால் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் அர்ஜுனா பட்டம் பெற்றவர். டி.ஜி வைஷ்ணவ் கல்லூரியில் மனிதவள மேலாண்மையில் முதுகலைக் கல்வி படித்திருக்கிறார். பிரக்ஞானந்தாவும் அவரும்தான், உலக சதுரங்க வரலாற்றிலேயே கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்ற ஒரே சகோதர-சகோதரி ஜோடி.

எளிமையான குடும்பத்தில் பிறந்தார் வைஷாலி. தந்தை ரமேஷ்பாபு சிறுவயதிலேயே போலியோவால் தாக்கப்பட்டு இயல்பாக நடக்கமுடியாமல் பாதிக்கப்பட்டவர். சென்னையில் தமிழ்நாடு மாநில அபெக்ஸ் கூட்டுறவு வங்கியில் பணிபுரிகிறார். தாயார் நாகலக்‌ஷ்மி ஓர் இல்லத்தரசி.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!