Home » காரம் குறையாக் கடுகு தேசம்
விளையாட்டு

காரம் குறையாக் கடுகு தேசம்

பெயரே கேள்விப்பட்டிராத தேசம். முதல் முறையாக உலகக்கோப்பையில் கால்பதித்திருக்கும் கத்துக்குட்டி அணி. ஆனால் பலமுறை கோப்பையை வென்றவர்களையே ‘சற்றே விலகி நில்லும் பிள்ளாய்!’ என்று சொல்லித் திக்குமுக்காட வைத்து விட்டது. இவ்வாண்டின் கால்பந்தாட்ட உலகக்கோப்பையின் (FIFA World Cup 2026) மொத்த கவனத்தையும் தன் பக்கம் திருப்பியிருக்கிறது கேப் வெர்டே (Cape Verde) அணி.

இந்த அணி, ஸ்பெயின், உருகுவே, சவுதி அரேபியா ஆகிய நாடுகளுடன் குரூப் H பிரிவில் இடம்பெற்றது. தங்கள் முதல் உலகக் கோப்பை ஆட்டத்தில், 2010இல் கோப்பையை வென்ற ஸ்பெய்னுடன் 0–0 என்றும், உருகுவேயுடன் 2–2 என்றும், சவுதி அரேபியாவுடன் 0–0 எனவும் டிரா செய்து அசத்தியது.

இதன் விளைவாகத் தங்கள் பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடித்து அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற்றனர். அந்த ஆட்டத்திலும் கால்பந்து உலகின் நம்பர் 1 அணியான அர்ஜென்டினாவைத் திக்குமுக்காட வைத்து, ஜெயித்தால் போதும் என்ற நிலைக்கு அவர்களைக் கொண்டுசென்றனர் (1-2 என்பது கௌரவமான தோல்வியே!)

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!