Home » பிறந்தநாள் கொண்டாடாத நாடு!
உலகம்

பிறந்தநாள் கொண்டாடாத நாடு!

அரை நூற்றாண்டு காலக் குருதி படிந்த வரலாறு. லட்சக்கணக்கான உடல்கள் புதைந்த பூமி. அந்த மண்ணில் 2011 ஜூலை 9 அன்று ஒரு புதிய கனவு மலர்ந்தது. அன்றுதான் உலகின் இளைய நாடான தெற்கு சூடான் பிறந்த நாள். அன்று அந்நாட்டின் தலைநகர் ஜுபாவின் தெருக்களில் மக்கள் மகிழ்ச்சியில் நடனமாடினர். துள்ளிக் குதித்து ஆர்ப்பரித்தனர். ‘நாங்கள் விடுதலை பெற்று விட்டோம் ‘என்ற முழக்கம் வானைத் தொட்டது.

கடந்த ஜுலை 9ஆம் தேதியோடு தெற்கு சூடான் உருவாகி பதினைந்து ஆண்டுகள் ஆகிறது. ஆனால் அன்று அங்கு எந்தக் கொண்டாட்டமும் இல்லை. எஞ்சியிருப்பது கண்ணீரும் வேதனையும்தான்.

ஆப்பிரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருந்த சூடான், ஒரு காலத்தில் அக்கண்டத்தின் மிகப்பெரிய நாடாக இருந்தது. ஆனால் ஒரே நாட்டுக்குள் இருவேறு உலகங்கள் இருந்தன. நாட்டின் வடக்குப் பகுதியில் அரபு-இஸ்லாமிய மக்களும், தென்பகுதியில் கிறிஸ்துவ மற்றும் பூர்வீக மத நம்பிக்கை கொண்ட ஆப்பிரிக்க இனக்குழுக்களும் வாழ்ந்தனர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!