உலகப் போரினால் பிரிட்டனின் பொருளாதாரம் மோசமான நிலைக்குச் சரிந்திருந்தது. இந்தியாவை இனியும் காலனியாக வைத்திருப்பது சாத்தியமில்லை என்ற முடிவுக்கு வந்திருந்தார் புதிய பிரிட்டிஷ் பிரதமர் அட்லி.
இந்தியாவில் இடைக்கால அரசை அமைக்க முடிவெடுக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தமிருந்த 1,585 இடங்களில், 923 இடங்களை வென்று பெரும்பான்மை பெற்றது காங்கிரஸ். அடுத்த இடத்தில் இருந்த ஜின்னாவின் முஸ்லீம் லீக், 429 இடங்களை வென்றது.
இடைக்கால அரசை இணைந்து அமைப்பதற்கு நேருவுக்கும் ஜின்னாவுக்கும் அழைப்பு விடுத்தார் வைஸ்ராய் வேவல். மொத்தமிருந்த பதினான்கு அமைச்சரவைப் பதவிகளை ஆறு காங்கிரஸுக்கு, ஐந்து முஸ்லீம் லீகுக்கு, மூன்று இதரக் கட்சிகளுக்கு எனப் பரிந்துரைத்தார் வேவல். நேரு, ஜின்னா இருவருமே அப்பரிந்துரையை ஏற்கவில்லை.















Add Comment