Home » இன்னிக்கு எவ்ளோ? நாளைக்கு எவ்ளோ?
இந்தியா

இன்னிக்கு எவ்ளோ? நாளைக்கு எவ்ளோ?

உலகிலேயே அதிக மக்கள்தொகையைக்கொண்ட நாடான இந்தியா, கடந்த ஏப்ரல் 1ஆம் அன்று மக்கள்தொகைக் கணக்கெடுப்பைத் தொடங்கியது. ஒட்டுமொத்தமாக, இது இந்தியாவின் பதினாறாவது மக்கள்தொகைக் கணக்கெடுப்பு. சுதந்தரத்துக்குப் பின் நடக்கும் எட்டாவது கணக்கெடுப்பு.

பத்தாண்டுக்கு ஒருமுறை நடந்துவந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, கோவிட் பெருந்தொற்று காரணமாக 2021ஆம் ஆண்டு நடைபெறவில்லை. பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் தற்போது அந்தப் பணிகள் தொடங்கியுள்ளன.

தற்போதைய சமூக, அரசியல் சூழலில் இந்தக் கணக்கெடுப்பு பெரும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, சாதிவாரிக் கணக்கெடுப்பையும் உள்ளடக்கியதாகத் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் சுதந்தரத்துக்குப் பின் நிகழும் முதல் சாதிவாரிக் கணக்கெடுப்பாக இது இருக்கும். கடைசியாக, 1931ஆம் ஆண்டில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பு முழுவதுமாக டிஜிட்டல் முறையில் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!