மனித நாகரிகத்தின் போக்கை மாற்றியமைத்த நெருப்பு, சக்கரம், விவசாயம், மொழி ஆகியவற்றின் வரிசையில், இணையமும் ஒரு மகத்தான மைல்கல். நவீன உலகில் வணிகம் முதல் வங்கிப் பரிவர்த்தனைகள் வரை அனைத்தும் ஆன்லைன் மயமாகிவிட்டன. சமூக வலைத்தளங்கள் மக்கள் கூடும் முக்கிய இடங்களாகிவிட்டன. இணையத்தின் இந்தத் தாக்கம் அரசியலையும் விட்டுவைக்கவில்லை. மகளிர் அணி, இளைஞர் அணி போல அனைத்து அரசியல் கட்சிகளும் இன்று தகவல் தொழில்நுட்ப அணியையும் (IT Wing) கொண்டுள்ளன.
2008ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், ஒபாமாவுக்கு ஆதரவாகச் சமூக வலைத்தளங்களில் சில பிரசாரக் குழுக்கள் உருவாக்கப்பட்டன. இவைதாம் இன்றைய தகவல் தொழில்நுட்ப அணிகளுக்கான முன்னோடியாகக் கருதப்படுகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை, 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மோடி அலையை உருவாக்கியதில் பாஜகவின் தகவல் தொழில்நுட்ப அணியினர் பெரும் பங்காற்றினர்.
மாநாடுகள், தெருமுனைக் கூட்டங்கள், ஊடக விளம்பரங்கள் ஆகியவை ஒருவழித் தகவல்தொடர்பாகவே இருந்தன. இணையவழிப் பிரசாரங்கள் மக்களின் கருத்துகளையும் உள்ளடக்கிய இருவழித் தகவல்தொடர்பாக இருந்ததால் பெரும் வரவேற்பைப் பெற்றன. இதுதவிர, குறைந்த செலவில் அதிகமான மக்களிடம் கருத்துகளைக் கொண்டு சேர்க்கவும் முடிந்தது.
















Add Comment