Home » பெங்களூரு இனி வேற ஊரு!
சமூகம்

பெங்களூரு இனி வேற ஊரு!

பெங்களூரு இன்று ஒரு மிகப்பெரிய மாற்றத்தின் வாசலில் நிற்கிறது. தன் வேகத்தால் தன்னையே துரத்திக் கொண்டிருக்கும் ஒரு நகரமாகவும் மாறியுள்ளது. ஒருகாலத்தில் ‘கார்டன் சிட்டி’ என அழைக்கப்பட்டபோது, அங்கு உயரமான கட்டடங்கள் அதிகமில்லை. அப்போது அந்நகரம் வேகத்தை விட அமைதியைச் சுவாசித்தது. ‘பென்ஷனர்’ஸ் பாரடைஸ்’ என்பது வெறும் பெயரல்ல; அது ஒரு வாழ்க்கைமுறை. மரங்களும் மழையும் பெங்களூரூவின் மொழிகளாக இருந்தன.

ஆனால், உலகளாவிய தகவல் தொழில்நுட்ப மையமாக மாறியபின், ‘சிலிக்கான் வேலி’ என்ற புதிய முகம் அந்நகரின் மீது மெதுவாக, ஆனால் உறுதியாகத் திணிக்கப்பட்டது. அந்த வளர்ச்சி திட்டமிட்டதாக இல்லை. அது அணை உடைந்த வெள்ளம்போல பெருகிப் பாய்ந்தது. வானத்தைத் தொடும் கட்டடங்கள் உயர்ந்தன; ஆனால் தரை மட்டத்தில் சாலைகள் சுருங்கின. உயரத்தில் நகரம் விரிந்தபோதும் தரையில் அது சிக்கிக் கொண்டது.

பெங்களூருவின் சாலை நெரிசலை உணர்வதற்கு, ஐ.டி.பி.எல் பகுதியைச் சுற்றியுள்ள வைட்‌ஃபீல்டை ஒரு சிறிய கண்ணாடியாக எடுத்துக்கொள்ளலாம். ஹோப்பார்ம் சிக்னலுக்கு அருகில், சிக்னலின் மூச்சோட்டத்தோடு ஒட்டியபடி ஒரு பேருந்து நிறுத்தம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!