டோக்கியோவின் அமைதியான குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள ஒரு வீடு. அந்த வீட்டின் கதவு பல நாட்களாகத் திறக்கப்படவில்லை. தபால்களும் நாளிதழ்களும் வாசலிலேயே தேங்கிக் கிடக்கின்றன. உள்ளே ஒருவர் உயிரிழந்து கிடக்கிறார். அவர் இறந்தது பக்கத்து வீட்டில் இருப்பவருக்குக் கூடப் பல நாட்களாகத் தெரியவில்லை.
பொருளாதாரத்திலும் தொழில்நுட்பத்திலும் உலகின் முன்னணியில் இருக்கும் ஜப்பானில், மனித உறவுகளுக்கு இடையே உருவாகியுள்ள ஆழமான இடைவெளி ஒரு பெரிய சமூகப் பிரச்சனையாக மாறியுள்ளது. ஜப்பானியர்கள் தனியாக வாழ்ந்து வீடுகளிலேயே உயிரிழப்பதை ‘கொடோகுஷி’ (தனிமை மரணங்கள்) என்று அழைக்கிறார்கள்.
கடந்த ஆண்டில் மட்டும் ஜப்பானில் சுமார் 77,000 பேர் தங்களது வீடுகளில் தனியாக உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தேசியக் காவல் முகமை தெரிவிக்கிறது. இதில் பெரும்பான்மையானவர்கள் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள்.















Add Comment