Home » அரியணை ஏறாத இளவரசி
உலகம்

அரியணை ஏறாத இளவரசி

இளவரசி ஐகோ

சூரியன் உதிக்கும் நாடு. ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழைமையான ஓர் அரச பரம்பரை. இன்றைய நிலையில் பதினாறு பேர் மட்டுமே மிச்சமிருக்கும் அரச குடும்பம். அந்தப் பரம்பரையின் நேர் வம்சாவளியில் நிற்கும் இளம்பெண். புன்னகையாலும் தன் புத்திசாலித்தனமான உரையாடல்களாலும் அனைவரையும் ஈர்க்கும் இளவரசி ஐகோ. தற்போதைய ஜப்பான் பேரரசர் நருஹிட்டோவின் ஒரே மகள். ஆனாலும் அவரால் தன் தந்தைக்குப் பின்னர் பேரரசியாக முடியாது. ஏனெனில் அவர் ஒரு பெண்.

ஜப்பான் தேசம், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரம். தொழில்நுட்பத்தில் முன்னோடி. நவீனத்துவத்தின் முகம். ஆனால் அதன் அரச குடும்பம் இருபத்தொன்றாம் நூற்றாண்டில் நின்று கொண்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டு விதிகளால் தன்னைத்தானே கட்டிப்போட்டுக் கொண்டிருக்கிறது. உலகின் மிகப் பழைமையான பரம்பரை முடியாட்சியைக் கொண்ட ஜப்பானில் தற்போது அரங்கேறிக் கொண்டிருக்கும் அரசியல் நாடகம் உலகம் முழுவதும் பேசுபொருளாகி இருக்கிறது. தானே உருவாக்கிய சொந்த விதிகளால் தன்னைத்தானே கழுத்தை நெரித்துக் கொண்டிருக்கும் ஒரு தருணத்தில் நிற்கிறது ஜப்பானிய முடியாட்சி.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!