‘இனி நம் நாட்டில் தேர்தல் கிடையாது!’ என்று பெருமிதத்துடன் அறிவித்தார் நிகராகுவாவின் அதிபர் டேனியல் ஒர்டேகா.
கூடியிருந்த லட்சக்கணக்கான மக்கள் அந்த அறிவிப்பைக் கேட்டதும் எழுப்பிய கரகோஷம் விண்ணைப் பிளந்தது. அவர்களுடைய ஆரவாரத்தைக் கேட்டால், ‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ என்று சொல்லிவிடலாம் போலத் தோன்றும். ஆனால் உண்மை நிலவரம் வேறு.
தென் அமெரிக்காவையும் வட அமெரிக்காவையும் கை கோர்த்து இணைத்து நிற்கும் பகுதியைத்தான் மத்திய அமெரிக்கா என்பார்கள். இந்த அரவணைக்கும் கைகளுக்குள் ஏழு நாடுகள் உள்ளன. அவற்றுள் மிகப் பெரிய நாடாக இருப்பது நிகராகுவா. பெரிய நாடாக இருந்தாலும் மக்கள்தொகை என்னவோ எழுபது லட்சம் மட்டுமே. பரந்த நிலப்பரப்பும், இயற்கை வளங்களும் இருந்தும், மத்திய அமெரிக்காவின் மிகவும் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக நிகராகுவா பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.















Add Comment