டாலி
1768 மே 20. வட கரோலினா மாகாணத்தின் கில்ஃபோர்டு பகுதியில், க்வேக்கர் சமூகத்தைச் சேர்ந்த ஜான் பெய்ன் — மேரி கோல்ஸ் தம்பதியருக்கு ஒன்பது குழந்தைகளில் மூன்றாவதாக ஒரு பெண் பிறந்தாள். அவளுக்கு டாலி (Dolley Payne) எனப் பெயரிட்டனர்.
அடிமை முறையை எதிர்த்த க்வேக்கர் கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டிருந்தார் ஜான் பெய்ன். வர்ஜீனியா மாநிலம் சட்டப்பூர்வமாக அடிமை விடுதலையை அனுமதித்தவுடன், தான் வைத்திருந்த அடிமைகளை விடுதலை செய்தார். பின் 1783இல் குடும்பத்தை ஃபிலடெல்ஃபியா நகருக்கு இடம் மாற்றினார். அங்கு ஒரு ஸ்டார்ச் தொழிற்சாலையைத் தொடங்கினார்.
ஆனால் சுதந்தரப் போருக்குப் பின் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் அந்தத் தொழில் முற்றிலும் நொடித்தது. கடன் தீர்க்க இயலாமல் போனதால், க்வேக்கர் சபை அவரை நீக்கியது. அவப்பெயரும் வறுமையும் ஜான் பெய்னை மனமுடைத்துப் படுக்கையில் வீழ்த்தின.
















Add Comment