Home » லட்சத்தீவுக்கு யார் உரிமையாளர்?
இந்தியா

லட்சத்தீவுக்கு யார் உரிமையாளர்?

லட்சத்தீவு யூனியன் பிரதேசத்தில் உள்ள பண்டாரம் நிலத்தின் (Pandaram land) உரிமை தொடர்பாக நீண்டகாலமாகப் பிரச்சினை நீடித்து வந்தது. இது தொடர்பான Fathima Holithithige vs Union Territory of Lakshadweep வழக்கில் கேரள உயர் நீதிமன்றம் சமீபத்தில் ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது.

இது என்ன வழக்கு? அதன் பின்னணி என்ன? கேரள உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது?

லட்சத்தீவு. இந்தியாவின் மிகச் சிறிய யூனியன் பிரதேசம். இதன் மொத்தப் பரப்பளவு சுமார் முப்பத்திரண்டு சதுர கிலோமீட்டர். இதில் மொத்தம் முப்பத்தாறு தீவுகள் உள்ளன; அவற்றில் பத்து தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர். எனவே, இப்பகுதியில் சிறிய அளவிலான நிலப்பகுதியை வைத்திருப்பது கூடப் பொருளாதார, சமூக மற்றும் வளர்ச்சிசார் முக்கியத்துவம் கொண்டது.

வரலாற்று ரீதியாக, இப்பகுதியை ஆட்சி செய்து வந்த அரக்கல் அரசின் (Arakkal Kingdom) கட்டுப்பாட்டில் இருந்த அரசுக்குச் சொந்தமான நிலங்கள் ‘பண்டாரம் நிலங்கள்’ என அழைக்கப்பட்டன. லட்சத்தீவின் மொத்த நிலப்பரப்பில் அறுபது சதவீதத்துக்கும் அதிகமான பகுதி பண்டாரம் நிலங்களின் கீழ்தான் வருகிறது. குறிப்பாக, பண்டாரம் நிலங்கள் Androth, Kalpeni, Kavaratti, Minicoy, Agatti தீவுகளிலும், மக்கள் வசிக்காத ஆறு தீவுகளிலும் பரவியுள்ளன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!