Home » கசக்கும் சர்க்கரை
இந்தியா

கசக்கும் சர்க்கரை

இந்தியாவில் சர்க்கரை விலை கணிசமாக அதிகரித்துள்ளது. ஜூன் மாதம் கிலோ 46 ரூபாயாக ஆக இருந்த நிலையில், தற்போது 72 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு எத்தனால் உற்பத்திக்கான சர்க்கரை பயன்பாடே காரணம் என்ற வாதத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது. உற்பத்தி மற்றும் சந்தை சார்ந்த காரணிகளே விலையேற்றத்துக்கான முக்கியக் காரணம் என்று அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த ஆண்டு ரெட் ராட் (Red Rot) மற்றும் டாப் போரர் (Top Borer) ஆகிய நோய்களால் கரும்புப் பயிர்கள் அதிகம் பாதிப்படைந்துள்ளன. கனமழையால் ஏற்பட்ட நீர்த் தேக்கத்தினாலும் சர்க்கரை உற்பத்தி பெரிதும் சரிவடைந்துள்ளது.

இந்தியாவின் சர்க்கரை உற்பத்தித் துறையில் எத்தனால் ஒரு முக்கிய அங்கமாகத் திகழ்கிறது. ஆலையில் கரும்பைக் கொண்டு சர்க்கரை அல்லது எத்தனால் தயாரிக்கலாம். இரண்டும் ஒரே மூலப்பொருளிலிருந்து பெறப்படுபவைதான். ஆனால் செயலாக்க முறைகள் மட்டுமே வேறுபடுகின்றன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!