Home » மதிக்கப்படாத தேர்தலும் மிரட்டி ஜெயிக்கும் சர்வாதிகாரமும்
உலகம்

மதிக்கப்படாத தேர்தலும் மிரட்டி ஜெயிக்கும் சர்வாதிகாரமும்

திரைத்துறையினரின் அரசியல் வருகையும் வெற்றியும் தென்னிந்தியாவுக்குப் பழகிவிட்டது. கேஜிபியில் பணிபுரிந்த அதிகாரிகள் சோவியத்தின் அரசியலில் அதிகாரத்திலும் முக்கிய இடங்களைப் பிடிக்கும் நடைமுறைக்கு ரஷ்ய மக்கள் பழகிவிட்டார்கள். தற்போதைய டிரெண்டாக, போரில் பங்கேற்ற ராணுவ அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகளாக ரஷ்ய நாடாளுமன்றத்தில் நுழைந்துள்ளார்கள்.

அண்மையில் நடந்து முடிந்த ரஷ்ய டூமாவுக்கான தேர்தலில் நாற்பத்தொன்பது ராணுவ வீரர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். மொத்தமுள்ள நானூற்றைம்பது பேரில் இது பத்து சதவீதம். எதிர்பார்த்தது போலவே, அதிபர் புதினின் யுனைடெட் ரஷ்யா கட்சி ஐம்பத்தெட்டு சதவீதப் பெரும்பான்மையுடன் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறது. இது இந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து தொடர்ந்து வெற்றி பெறும் இக்கட்சியின் இரண்டாவது அதிகபட்ச வெற்றி சதவீதம்.

உக்ரைன் மீதான போர் தொடங்கிய பிறகு நடக்கும் தேர்தல் என்பதால் இது முக்கியத்துவம் பெறுகிறது. போரையும் அதிபர் புதினின் ஆட்சியையும் மக்கள் எவ்வளவு பூரிப்புடன் வரவேற்கிறார்கள் என்பதை உலகுக்கு நிரூபிப்பது ஒன்றே இந்தத் தேர்தலின் நோக்கம். ரஷ்யாவின் ஜனநாயக ஆட்சிக்கான ஆதாரங்களாக இவை நடத்தப்படுகின்றன. அதன் மேல் நம்பிக்கை இருப்பதைப் பற்றி கவலையில்லை. கேள்வி எழுப்ப முடியாதபடி தவறையும் முறைப்படிச் செய்வதில் தேர்ந்தவர் அதிபர் புதின் என்பது உலகறிந்ததே.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!