Home » நல்லது கெட்டது – 1 (புதிய தொடர்)
தொடர்கள் • நல்லது கெட்டது

நல்லது கெட்டது – 1 (புதிய தொடர்)

திருடனா, போலிஸா?

சீனா உள்பட, உலகம் முழுவதிலும் இருந்து செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாதிரிகளை (மாடல்களை) தரவிறக்க, சோதனை செய்ய, அவற்றைப் பற்றிக் கலந்துரையாட உதவும் தளம் ஹக்கிங் ஃபேஸ் (Hugging Face). திறந்த மூலமாக (ஓபன் சோர்ஸ்) கிடைக்கும் செய்யறிவு மாதிரிகளின் களஞ்சியம் என்றும் இதனைச் சொல்லலாம். ஃபிரான்ஸில் இருந்து வந்த மூவர், 2016ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தொடங்கிய நிறுவனம் இது.

2026 ஜூலை 11 அன்று ஹக்கிங் ஃபேஸின் பாதுகாப்புப் பொறியாளர்களின் திரைகளில் வந்துகொண்டே இருந்த சமிக்ஞைகளைப் பார்த்தவர்களுக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. மற்ற பிரபல இணையத்தளங்களைப் போலவே இருபத்துநான்கு மணிநேரமும் ஹக்கிங் ஃபேஸின் தளமும் குறும்பர்களால் தொடர்ந்து தாக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். இவற்றை நிகழ்நேரத்தில் அடையாளம் கண்டுகொண்டு, அவற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளக்கூடிய நவீன ஏஐ கட்டமைப்பை ஹக்கிங் ஃபேஸ் உருவாக்கி இருந்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!