Home » சாமிபூமி – 1 (புதிய தொடர்)
சாமிபூமி தொடர்கள்

சாமிபூமி – 1 (புதிய தொடர்)

கருப்புசாமி

எல்லையில் ரத்தக் காயங்களுடன் செத்துக் கிடந்தான் கருப்பன். அவனைச் சுற்றிக் குதிரைகளும் கொள்ளையர்களும் மடிந்து கிடந்தனர்.

விடிகாலையின் மசமசப்பான வெளிச்சத்தில் காளைகளுடன் வயலுக்குத் தண்ணீர் இறைக்க வந்த காடன்தான் முதலில் பார்த்தான். அங்கங்கே மனித உடல்களும் குதிரைகளும் இரைந்து கிடந்தன. அவற்றுக்கு நடுவே ஆறடியில் ஆகிருதியாகக் கருப்பனும் கிடந்தான். அவனுடைய கரிய உடல் முழுவதும் ரத்தத்தில் நனைந்திருந்தது. மண்ணிலும் ரத்தம் அப்பிக் கிடந்தது. என்னென்னவோ பூச்சிகள் மொய்த்துக் கொண்டிருந்தன.

அக்காட்சியைக் கண்ட காடன் வெலவெலத்துப் போனான். மாடுகளை அப்படியே விட்டுவிட்டு கிராமத்தை நோக்கித் திரும்பி ஓடினான்.

நான்கு நாள்களுக்கு முன்பே அண்டைநாட்டுப் படை அந்தக் கிராமத்தின் வழியாகக் கோட்டைக்கு வருவதாகத் தகவல் வந்தது. அந்தக் கிராமம் பாண்டிய நாட்டின் எல்லைப் பகுதி. இரவில்தான் வருவார்கள். விரைந்து சென்றால் விடிவதற்குள் கோட்டையை அடைந்துவிடலாம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!