Home » ஒரு குடும்பக் கதை – 227
குடும்பக் கதை • தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 227

227. அமெரிக்காவில் என்.டி.ஆர்
தன் மீது கோபம் கொண்ட சீக்கிய சமூகத்தின் நல்லெண்ணத்தைப் பெறுவதற்காகவும், தான் எள் என்றால் எண்ணெய்யாக இருக்கக் கூடியவரை ஜனாதிபதி ஆக்குவது நல்லது என்ற எண்ணத்துடனும், உள்துறை அமைச்சராக இருந்த ஜெயில் சிங்கிற்கு ‘இந்தியாவின் முதல் சீக்கிய ஜனாதிபதி’ என்ற மகுடம் சூட்டி, அவரை ஜனாதிபதி மாளிகைக்கு அனுப்பி வைத்தார் இந்திரா காந்தி.
ஏறத்தாழ இதே காலகட்டத்தில், ஸ்ரீலங்காவில் சிங்களப் பெரும்பான்மை அரசாங்கம் தமிழர்கள் மீதும், அவர்களுக்காக ஆயுதமேந்திப் போராடிய தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் மீதும் கடுமையாகத் தாக்குதல்களை நடத்தினார்கள்.
இதனால் ஏராளமான அப்பாவித் தமிழ் மக்கள் பலியானார்கள். ஏராளமான ஈழத் தமிழர்கள் அகதிகளாகத் தமிழ்நாட்டுக்கு வரத்தொடங்கினார்கள்.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் ஆதரவு விடுதலைப் புலிகளுக்கு இருந்தது. புலிகள் தலைவர் பிரபாகரன் எம்.ஜி.ஆரின் செல்லப்பிள்ளையாகவே பார்க்கப்பட்டார்.
 ஸ்ரீலங்காவில் தமிழர்களுக்குக் கேடயமாக விளங்கிய புலிகளுக்கு இந்திரா காந்தியும் ஆதரவளித்தார். அவரது ஆசியோடு, மத்திய அரசின் ரா அமைப்பு தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கும் முகாம்களை நடத்தியது.

Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!