228. ஆட்சிக் கவிழ்ப்பு
என்.டி.ராமாராவ் ஹைதராபாத் வந்திறங்கிய அடுத்த சில மணிநேரத்தில் சினிமா பாணியில் காட்சிகள் அரங்கேறின.
காங்கிரஸ் கட்சி நாதெண்ட்லா பாஸ்கர ராவ் மூலமாக தெலுங்கு தேசம் கட்சியை உடைத்து, தன்னுடைய ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்வதை என்.டி.ஆர் தெரிந்துகொண்டார். உடனடியாக, பாஸ்கர ராவை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க கவர்னருக்குச் சிபாரிசு செய்தார்.
இது தெரிந்து கொண்ட பாஸ்கர ராவ், உடனடியாகத் தன் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்து கடிதம் அனுப்பினார். கூடவே அமைச்சர்கள் ராமமுனி ரெட்டி, ஜீவன் ரெட்டி, சத்யநாராயணா என இன்னும் மூன்று பேர் ராஜிநாமா செய்தார்கள்.
இதனால் ஆளும் கட்சிக்குள் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. தெலுங்கு தேசம் ஆட்சியைக் கவிழ்க்க காங்கிரஸ் கட்சியோடு சேர்ந்து பாஸ்கர ராவ் சதி செய்வதாகக் கட்சியில் எல்லோரும் குற்றம் சாட்டினார்கள்.
காங்கிரஸ் கட்சியோ தங்களுக்கும் ஆந்திராவில் நடக்கும் அரசியல் பரபரப்பு சம்பவங்களுக்கும் சம்பந்தமே இல்லாதது போல நடப்பவற்றை வேடிக்கை பார்த்ததோடு, ‘இது தெலுங்கு தேசம் கட்சியில் நடக்கும் உள்கட்சிப் பிரச்சினை’ எனக் கூறியது.















Add Comment