Home » பொரியல், கூட்டு, ரசம் – 6
தமிழ்நாடு

பொரியல், கூட்டு, ரசம் – 6

ரஜினி அரசியல்

கூட்டணி அரசியலைப் பேசும்போது அரசியல் கட்சிகளைப் பற்றி மட்டுமல்லாது வாக்குகளைப் பாதிக்கும் ரஜினி போன்ற தனி மனிதர்களைப் பற்றியும் பேசியாக வேண்டும்.

ஐம்பதாண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்த் திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்து இன்றைக்கும் உச்சத்திலிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். அரசியலுக்கு வர வேண்டும் என்ற அவருடைய ஆசையைப் பல ஆண்டுகளாக வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவ்வப்போது வெளிப்படுத்தியே வந்திருக்கிறார்.

1991 முதல் 1996 வரை தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி இருந்தது. இந்த ஐந்தாண்டுகளில் ஜெயலலிதா தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி நடந்துகொண்ட விதம் பலருக்கும் எரிச்சலூட்டியது. போலவே, போயஸ் கார்டனில் வசித்துவந்த ரஜினிக்கும் பெரும் தொல்லையைத் தந்தது. இதனால் எரிச்சலடைந்த ரஜினிகாந்த்துக்கு ஜெயலலிதாவின் அரசியல் மீது வெறுப்பு உருவானது.

பாட்ஷா பட வெற்றி விழாவின்போது ஜெயலலிதா ஆட்சியை விமர்சித்து வெளிப்படையாகப் பேசினார் ரஜினிகாந்த். தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாசாரம் பெருகியிருப்பதற்குத் தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டுமெனச் சொன்னார். ஜெயலலிதா அரசில் அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீரப்பன் அமர்ந்திருந்த மேடையில் ரஜினிகாந்த் பேசிய அந்தப் பேச்சு அவருடைய அமைச்சர் பதவி பறிபோகவும் காரணமாக அமைந்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!