கொஞ்சம் பொய், கொஞ்சம் உளவியல்
உங்களிடம் ஒரு மனிதரைக் காட்டி, ‘அவருடைய எடை என்னவாக இருக்கும்?’ என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. நீங்கள் அதற்குத் தோராயமாக ஒரு எடையைச் சொல்கிறீர்கள். சரி, இந்தக் கணிப்பை நீங்கள் எவ்வாறு அடைந்தீர்கள்? அதாவது, உங்கள் மனம் செயல்பட்ட விதம் எப்படி இருந்தது? இதைத்தான் Thought Process என்பார்கள்.
மனத் தராசில் உங்கள் எடையையே ஒரு தட்டில் எடைக்கல்லாக வைத்திருப்பீர்கள். அந்த மனிதரைத் தூக்கி மறுதட்டில் வைத்திருப்பீர்கள். உங்கள் எடை இவ்வளவு என்றால் அந்த மனிதரின் எடை எவ்வளவு இருக்கும் எனக் கணித்திருப்பீர்கள். உங்கள் எடைதான் உங்களுடைய குறிப்புத் தரநிலை அல்லது ஒப்பீட்டுத் தரநிலை. அதாவது Standard Reference.
உயரம், வயது, காலணி அளவு, மேலாடை, கீழாடை, உள்ளாடைகளின் அளவுகள் போன்ற அனைத்து ஒப்பீடுகளுக்கும் உங்கள் மனம் செயல்படும் விதம் இப்படித்தான் இருக்கும். புறப் பரிமாணங்களுக்கு மட்டுமல்ல, அகப் பரிமாணங்களுக்கும் இதேதான்.















Add Comment