Home » உரிமையைக் கேட்டால் உதை
உலகம்

உரிமையைக் கேட்டால் உதை

பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீர் (PoK) மக்கள், தங்கள் அடிப்படை உரிமைகளைக் கோரிப் போராடிவருகின்றனர். போராட்டத்தை ஒடுக்குவதற்காகப் பொதுமக்களைச் சரமாரியாகச் சுட்டுத் தள்ளியுள்ளது பாகிஸ்தான் பாதுகாப்புப் படை. இச்சூழலிலும் அம்மக்கள் தொடர்ந்து போராடிவருகின்றனர்.

‘பாகிஸ்தான் எங்களுக்குத் தேவையில்லை’ என்ற முழக்கத்துடன் தற்போது போராடிவருகிறது PoK. இவர்கள்தான் சுமார் எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான்தான் வேண்டும் என்று போராடியவர்கள் என்பதை எண்ணிப் பார்க்க விந்தையாகத்தான் இருக்கும்.

ஒருங்கிணைந்த இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் தனி நாடாகப் பிரிந்த சமயம் அது. காஷ்மீர் மன்னர் ஹரி சிங், இரண்டு நாடுகளுடனும் சேர விரும்பவில்லை. ஆனால், அந்த முடிவில் அவரால் நிலைத்திருக்க முடியவில்லை. பிரிவினைக்கு முன்பே, மேற்கு ஜம்முவைச் சேர்ந்த முஸ்லிம்கள் அவருக்கு எதிராகக் கலகம் புரியத் தொடங்கியிருந்தார்கள். அதே நேரத்தில், கில்கிட் பகுதியின் ஊர்க்காவல் படையினர் அப்பகுதியை ராஜாவின் ஆட்சிக்குக் கட்டுப்படாத சுதந்தரப் பகுதியாக அறிவித்தனர். பின்னாளில், காஷ்மீரைப் பிடிக்கும் நோக்கத்துடன் படையெடுத்து வந்த பாகிஸ்தானுடன் இவர்கள் இணைந்துகொண்டார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!