Home » நிலா என்ன விலை கேளு?
உலகம்

நிலா என்ன விலை கேளு?

நிலா அமெரிக்காவுக்குத் தான் சொந்தம் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியிருக்கிறார். ‘இந்த ரோடு என்ன விலைனு கேளு… இந்த ஊரு என்ன விலைனு கேளு’ என்று லாட்டரிச் சீட்டுப் பரிசு விழுந்தவுடன் கவுண்டமணி துள்ளிக் குதிப்பாரே, அதுபோல இருக்கிறது டிரம்ப்பின் சமீப கால அறிவிப்புகள்.

இரான் இறுமாப்பாய் நெஞ்சை நிமிர்த்திப் பதிலடி கொடுப்பதால் மூளை குழம்பிவிட்டதா என்று தெரியவில்லை. இரண்டு வாரங்கள் முன்புதான் ஹார்முஸ் ஜலசந்தியை டிரம்ப் ஜலசந்தி என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என அறிவித்திருந்தார்.

இரண்டே இரண்டு முடிகள் நரைத்ததற்காகப் பக்கத்து வீட்டுப் பெண் என்னை அங்கிள் என்று விளித்ததையே ஜீரணிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். பெண் என்பதால் பிஃப்டி கேஜி தாஜ்மஹால் என்று கற்பனை செய்துவிடாதீர்கள். தோராயமாக ஒரு குவிண்டால் எடை இருப்பாள். சரி, உருவக்கேலி கூடாது.

அங்கிள் அக்கப்போரை ஒருவழியாகச் சமாளித்து வெளியே வந்தால் டிரம்ப்பின் அறிவிப்பு தலை சுற்ற வைக்கிறது. லிட்டில் ஹார்ட். சின்ன இதயம். எத்தனை அதிர்ச்சிகளைத்தான் தாங்குவது?

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!