ஒரு மூட்டைப் பொய்கள்
பொய்யர் வெளிப்படுத்தும் சில பொய் காட்டும் வெர்பல் நடத்தைகளைப் பார்ப்போம். இவற்றை மூட்டையாகக் கட்டி மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். இவை நம்பகத்தன்மை மிக்க தடயங்கள். கொஞ்சம் கொஞ்சமாக இந்த மூட்டையை நிரப்புவோம்.
‘அப்பாடா, முடிஞ்சுதுடா சாமி!’
நீங்கள் விவாதம் செய்துகொண்டிருக்கும் பொருளிலிருந்து வேறு பொருளை நோக்கி உங்கள் பேச்சு திரும்பும்போது சந்தேக நபருடைய முகத்தைக் கவனியுங்கள். அவரிடம் மகிழ்ச்சியும் நிம்மதியும் தெரிகிறதா? சில சமயம் அசட்டுப் புன்னகைகூடத் தோன்றும். என்றால், அவர் உங்களிடம் எதையோ மறைக்கிறார் என்று அர்த்தம்.
விவாதத்தின்போது அவர் தூக்கிப் பிடித்துக்கொண்டிருந்த கேடயத்தை இப்போது கீழே இறக்கியிருப்பார். அதனால், பதற்றம் தணிந்து ரிலாக்ஸ் மனநிலைக்குச் செல்வார். உடல்மொழி, தற்காப்பு நிலையிலிருந்து இயல்பு நிலைக்குத் திரும்பும்.















Add Comment