மாசாணியம்மன்
இருள் சூழ்ந்த நள்ளிரவில் ஆனைமலைக் காட்டில் கர்ப்பமாக இருந்த ஒரு பெண்ணை காரகன் என்னும் அரக்கன் துரத்திக் கொண்டிருந்தான். வாயில் மூச்சு வாங்கிக் கொண்டே அவள் வேகமாக ஓடினாள். மாட்டுச் சாணத்தை மிதித்துவிட நிலை தடுமாறிக் கீழே விழுந்தாள்.
இனி அவளால் ஓட முடியாது என்பது அரக்கனுக்குத் தெரிந்துவிட்டது. ஏளனமாகச் சிரித்தபடி அவளை நோக்கி நடந்து வந்தான். ஓட்டப்பந்தயத்துக்குத் தயாராக நிற்கும் வீரன் போல அவளருகே குனிந்து அமர்ந்தான். கையில் இருந்த அரைத்த மிளகாயை மேடிட்ட அவள் வயிற்றில் தடவினான். அவள் அலறினாள்.
மருத்துவக் கிழவி திடுக்கிட்டுக் கண்விழித்தாள். கனவில் ஏன் அந்த அரக்கன் வந்து தொலைந்தான்? இதுவரை அவளுக்கு வந்த கனவுகள் அனைத்தும் பலித்துள்ளன. கிழவியின் கைகள் பயத்தில் நடுங்கின. எழுந்து போய் பானையில் இருந்த தண்ணீரை எடுத்துக் குடித்தாள்.
யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. இந்த நேரத்தில் வந்து கதவைத் தட்டுவது?
















Add Comment