Home » உருகும் சாக்லெட் நாடு
உலகம்

உருகும் சாக்லெட் நாடு

சுவிட்சர்லாந்து என்றால் உங்கள் கண் முன் என்ன விரியும்? சாக்லேட். வாட்ச். வெள்ளிப் பனி மலைகள். பனிப்பொழிவு. குளிர்ந்த காற்று. நினைத்தாலே சிலிர்க்கிறதா?

பனிப் பிரதேசத்தில் ஆனந்தமாக ஒரு டிரிப் அடிக்க வேண்டுமெனில் நம்மூர் பிரபலங்கள் படையெடுக்கும் இடம் சுவிட்சர்லாந்து. ஆனால் இப்போதிலிருந்து ஐம்பது வருடங்களில் இந்தப் பனி, குளுமை எல்லாம் காணாமல் போய்விடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

அங்கு இந்த ஆண்டில் மட்டும் 5.5% பனிப்பாறைகள் உருகியுள்ளன. 2022இல் 6% பனிப்பாறைகள் நீரோடு நீராகிவிட்டன. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 20% பனி காணாமல் போய்விட்டது. பல ஆயிரம் ஆண்டுகளாகச் சேமித்து வைத்திருந்த இயற்கைப் பொக்கிஷம், இன்று நம் கண்முன்னால் அழிந்து வருகிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்தே ஆல்ப்ஸ் மலைகளில் பனிப்பொழிவு மற்றும் பனி வெளியேற்றம் பற்றி அளவிடப்பட்டு வருகிறது. GLAMOS (Glacier Monitoring in Switzerland) என்ற அமைப்பு தற்போது இந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. அவர்கள் நூற்று நாற்பது வருடத் தரவுகளை ஆராய்ந்ததில், 2021 முதல் 2026ஆம் ஆண்டு வரை வெளியேறிய நன்னீரின் அளவு, இதுவரை இல்லாத அளவு என்று எச்சரிக்கின்றனர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!