தென்கொரியாவின் உல்சான் தேசியத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், சூரிய ஒளியைக் கொண்டு கடல் நீரைக் குடிநீராக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.
கடல் நீரைக் குடிநீராக மாற்றுவது உலக நாடுகளில் பல வகைகளில் செயல்படுத்தப்படும் முறைதான். ஆனால் பம்புகள் எதுவுமில்லாமல், மின்சாரம் தேவைப்படாமல் வெறும் சூரிய ஒளியை மட்டும் வைத்து இதைச் சாத்தியப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் ஒரு சதுரடிப் பரப்பளவில், ஒவ்வொரு மணிநேரத்துக்கும் 4.1 லிட்டர் நீரை எடுக்க முடிகிறது.
பல ஆண்டுகளாக நீர்ச் சுத்திகரிப்பு முறைகளை ஆய்வு செய்து வந்த இந்த ஆராய்ச்சிக் குழு, கடந்த ஜனவரியில் தங்களது புதிய தொழில்நுட்பத்தைப் பற்றி அறிவித்தது. கடல் நீர் நீராவியாகி மழையாக வரும் அதே தொழில்நுட்பம்தான் இங்கும் பயன்படுத்தப்படுகிறது.















Add Comment