Home » டிரம்ப்: வாயைப் பிளக்க வைக்கும் வருமானம்
உலகம்

டிரம்ப்: வாயைப் பிளக்க வைக்கும் வருமானம்

அமெரிக்க அரசாங்கத்தின நெறிமுறைகள் அலுவலகம் (US Office of Government Ethics) 927 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை அண்மையில் வெளியிட்டுள்ளது. அதில் அதிபர் டொனால்டு டிரம்ப்பின் சென்ற ஆண்டு வருமானம் எவ்வளவு என்று விலாவாரியாகப் பட்டியலிட்டுள்ளது.

2025 ஜனவரியில் இரண்டாவது முறையாகப் பதவிக்கு வந்த டிரம்ப், கடந்த ஓராண்டில் மட்டும் சம்பாதித்த தொகை எவ்வளவு தெரியுமா? 2.2 பில்லியன் அமெரிக்க டாலர். இந்திய மதிப்பில் சுமார் 20,951 கோடி ரூபாய்! இச்செய்தி பல்வேறு தரப்பிலிருந்து அவர் மீது விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் உருவாக்கியுள்ளது.

இத்தனைக்கும் அவர் அதிபராக இருப்பதற்கு வாங்கும் நான்கு லட்சம் டாலர் மாத ஊதியத்தில் ஒரு டாலரை மட்டுமே எடுத்துக் கொண்டு, மிச்சத்தை நன்கொடையாகக் கொடுத்து விடுகிறார் என்கிறது வெள்ளை மாளிகையின் செய்திக் குறிப்பு.

பிறகு எப்படி, எங்கிருந்து இவ்வளவு மலைக்க வைக்கும் வருமானம் அவருக்கு வந்தது?

அரசியலில் அடியெடுத்து வைப்பதற்கு முன்பே டிரம்ப் பெரும் பணக்காரர்தான். முதல் முறை அவர் அதிபரானபோது அவருடைய வருமானத்தின் பெரும் பகுதி ரியல் எஸ்டேட் முதலீடுகள், சொகுசு விடுதிகள் மற்றும் கோல்ஃப் மைதானங்களிலிருந்து பெறப்பட்டது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!