கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மே 4ஆம் தேதி வெளியிடப்பட்டன. 118 இடங்களைக் கைப்பற்றும் கட்சியோ அல்லது கூட்டணியோ ஆட்சியமைக்கும் என்ற சூழலில், கட்சி தொடங்கி இரண்டே ஆண்டுகளான நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாகத் தேர்வானது.
திமுக தலைமையிலான கூட்டணி இரண்டாம் இடத்தையும், அதிமுக தலைமையிலான கூட்டணி மூன்றாம் இடத்தையும் கைப்பற்றின. பெரும்பான்மை இல்லாவிட்டாலும் தனிப்பெரும் கட்சியான தவெகதான் ஆட்சியமைக்கும் என்ற களச்சூழலை திமுகவும் அதிமுகவும் மிக விரைவாகப் புரிந்துகொண்டன.
118 இடங்கள் கிடைத்தால்தான் ஆட்சியமைக்க முடியும் என்ற சூழலில், தவெக யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது. தவெகவுக்குச் சாதகமாகவும் எதிராகவும் சில வாய்ப்புகள் இருந்தன.















Add Comment