Home » மீதிமுக?
தமிழ்நாடு

மீதிமுக?

தமிழக அரசியல் களம் புதிய சூழலுக்கு மாறியிருக்கிறது. தவெகவின் தேர்தல் வெற்றியால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருப்பதோடு அரசியல் மாற்றங்களும் ஏற்படத் தொடங்கியிருக்கின்றன. சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேதான் போட்டி என விஜய் ஒவ்வொரு முறையும் சொல்லிக்கொண்டிருந்தார். அதிமுகவை ‘மற்றும் பலர்’ பட்டியலில் வைத்திருந்தார். அந்தக் கருத்துக்கு வலுசேர்க்கும் விதமாகவே தொடர்ச்சியான பல சம்பவங்கள் அதிமுகவில் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.

தேர்தல் முடிவுகள் அதிமுகவை மூன்றாம் இடத்துக்குத் தள்ளியிருக்கும் சூழலில், அதிமுக இன்னொரு முறை பிளவைச் சந்தித்திருக்கிறது. இந்த முறை சி.வி. சண்முகமும், எஸ்.பி. வேலுமணியும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகச் செயல்படத் தொடங்கியிருக்கின்றனர். தன்னை எதிர்த்த அத்தனை பேரையும் கட்சிப் பொறுப்புகளிலிருந்து நீக்கியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

இன்றைக்கு எடப்பாடிக்கு எதிராகத் தீவிரமாகக் கலகக்குரல் எழுப்பி வரும் சி.வி. சண்முகம்தான் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி 2022ஆம் ஆண்டு நடந்த அதிமுகவின் பொதுக்குழுவில் பேசினார். பொதுக்குழு நடந்த மேடையிலிருந்து வெளியேறியபோது ஓ. பன்னீர்செல்வத்தின் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்ட சம்பவமும் நடைபெற்றது. தன்னை எதிர்த்த அத்தனை பேரையும் கட்சியிலிருந்து நீக்கிய எடப்பாடி, ஒன்றுபட்ட அதிமுக என்ற கருத்தைத் தொடர்ந்து பிடிவாதமாக மறுத்து வருகிறார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!