மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழ்நாட்டு மக்கள் பிரதிநிதிகளைப் பொய்யர்கள், நாகரிகமற்றவர்கள், ஜனநாயகமற்றவர்கள் என நாடாளுமன்றத்திலேயே சொல்லியிருக்கிறார். பேச்சு வேகத்தில் தெரியாமல் வந்த சொற்கள் அல்ல. ஒருமுறை சொன்னதோடு நிறுத்தாமல் மீண்டும் ஒருமுறை அழுத்திச் சொன்னார். எதிர்ப்பு...
Tag - பிரதமர் மோடி
குஜராத் மாநிலம், துவாரகா கடற்பகுதியில் தொல்பொருள் ஆய்வாளர்கள் நீருக்கடியில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். ஆழ்கடல் அகழாழ்வு மையம் (Underwater Archaeology Wing) எண்பதுகளில் இருந்தே இந்தப்பகுதியில் ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. இப்போது சமீபத்தில் இதற்கு அதிகமான நிதி ஒதுக்கப்பட்டு, ஆய்வுகள்...
மத்திய அரசு தாக்கல் செய்த இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் பன்னிரண்டு லட்சம் வரை ஈட்டும் வருமானத்துக்கு வரிச்சலுகை அளிக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஒரு கோடி மக்கள் பயன்பெறுவர். பலன் பெற்ற ஒரு கோடி மக்கள் மிச்சப்படுத்தும் பணத்தை வைத்து, நிறைய பொருள்கள் வாங்கி சில்லறை விற்பனைச் சந்தையில் வியாபாரம் கூடி...
காஷ்மீரின் கந்தர்பால் பகுதியில் உள்ள z மோர்ச் சுரங்கப்பாதையைக் கடந்த ஜனவரி பதிமூன்றாம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். இது சோன்மார்க் சுரங்கப்பாதை என்றும் அறியப்படுகிறது. ககாங்கிர் மற்றும் சோன்மார்க் இடையே வருடம் முழுவதும் தடையற்ற போக்குவரத்தை உறுதிசெய்யும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தச்...
புலம்பெயர்ந்தோர் தினத்தில் அவர்களுக்கெனத் தனித்துவமான ரயில் பயணத்தைத் தொடங்கிவைத்தார் இந்தியப் பிரதமர். பிரவாசி பாரதிய எக்ஸ்பிரஸ். பிரவாசி என்றால் புலம்பெயர்ந்தவர்கள் என்று பொருள். புலம்பெயர்ந்தவர்களுக்காக சிறப்பு ரயில் ஒன்று தனியாக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை. இந்த ரயில் தனது முதல்...
இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக்க மூன்று நாள் பயணமாக இந்தியா வந்தார். இந்தியப் பிரதமர் மோடியைச் சந்தித்தார். இந்தியாவும் இலங்கையும் பேசினால் மீனவர்கள் விவகாரம் தவிர்க்க முடியாத பேசுபொருள். இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க இலங்கை அதிபரை வலியுறுத்தும்படி மோடிக்கு, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்...
நாடு முழுவதும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவதற்கான ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்குப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதாவை நிறைவேற்ற ஆளும் பாஜக அரசு ஆயத்தமாகி வருகிறது. 2029ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த...
இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து முதலீடுகளை ஈர்த்ததாக அதானிக்கு எதிராக அமெரிக்காவில் நவம்பர் 20ஆம் தேதி வழக்கு தொடரப்பட்டது. ஆந்திரா, ஒடிஷா, தமிழ்நாடு, ஜம்மு-காஷ்மிர், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் மின் விநியோக ஒப்பந்தங்களைப் பெற சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாயை லஞ்சமாகக் கொடுத்து மோசடி...
அமெரிக்காவின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றிருக்கும் டொனால்ட் டிரம்ப், நாட்டின் கல்வித் துறையை இனி ஒன்றிய அரசு நிர்வகிக்காது; மாநிலங்களே அந்தப் பொறுப்பை முற்று முழுதாக ஏற்கும் என்று அறிவித்திருக்கிறார். இனி அமெரிக்காவெங்கும் படிக்கும் பிள்ளைகளுக்கான பாடத்திட்டம் முதல் தேர்வுகள் வரை அனைத்தையும்...
சென்ற வாரம் முழுக்க நம் பத்திரிகைகளை நிறைத்தது இந்த மும்மூர்த்திகளின் படம் தான். ரஷ்ய அதிபர் புதின் நடுவிலிருக்க, இந்தியப் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இருபுறமும் வீற்றிருந்தார்கள். நின்றாலும், நடந்தாலும், அமர்ந்தாலும் நண்பர்கள் மூவரும் பிரியவே இல்லை. உலக உருண்டையில் மேற்குலகம்...