கடந்த சில வாரங்களில் உலகின் சில இடங்களில் விந்தையான நிகழ்வு நடந்திருக்கிறது. ஒரே நாளில் ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் விற்றுப் போயிருக்கின்றன.
அயர்லாந்தில் ஒரு புத்தகக் கடைக்கு ஒரே நாளில் 5, 000 புத்தக ஆர்டர் வந்திருக்கிறது. ஐயாயிரமும் வெவ்வேறு நூல்கள். ஆனால் இவை யாரும் வாங்காத புத்தகங்கள். உதாரணமாக, மேற்கு அயர்லாந்தின் வரலாறு பற்றிய புத்தகம்.
ஜப்பானின் ஒரு பழைய புத்தகக் கடை, டன் கணக்கில் ஆர்டர்கள் வந்திருப்பதாகச் சொல்கிறது. ஐந்து டன் ஜப்பானிய மொழிப் புத்தகங்கள். இவர்கள் ஏற்கெனவே ஐம்பது டன் பழைய நூல்களை அமெரிக்கா அனுப்பிவிட்டதாகச் சொல்கிறார்கள்.
ஒரு டன் என்பது ஆயிரம் கிலோ. ஒரு புத்தகத்தின் சராசரி எடை ஒரு கிலோ இருந்தால் அதிகம். ISBNdb போன்ற ஆன்லைன் நிறுவனங்களும் இத்தகைய தொழிலில் இறங்கியிருப்பதாகக் கூறுகிறார்கள்.















Add Comment