Home » செலவில்லாமல் சந்தோஷம்
அறிவியல்-தொழில்நுட்பம்

செலவில்லாமல் சந்தோஷம்

இரவு பத்து மணியாகியும் அலுவலகத்தில் இருக்கும் ஒருவர், தனக்கு பிடித்தமான உணவை இணையதளத்தில் பார்க்கிறார். அதை ஆர்டர் செய்கிறார். உடனே, ‘சற்றுநேரத்தில் உணவு வீட்டை அடையும்’ என்ற அறிவிப்பு காட்டப்படுகிறது. அதோடு லைவ் ட்ராக்கிங் இணைப்பும் கிடைக்கிறது.

இன்னும் இரண்டு நிமிடங்களில் வந்துவிடுவார், இதோ பக்கத்து தெருவில்தான் இருக்கிறார் என்று நொடிக்கு நொடி நிலைத்தகவல்கள். இது முடிந்ததும் ‘நீங்கள் ஆர்டர் செய்திருந்த உணவு உங்கள் வீட்டை வந்தடைந்தது, வாழ்த்துகள்’ என்று ஒரு செய்தி பக்கம் விரியும். அதோடு, ‘இந்தச் செயலியைப் பயன்படுத்தி நீங்கள் இத்தனை ரூபாய் சேமித்துள்ளீர்கள் என்ற கூடுதல் தகவலுடன், ‘தொடர்ந்து இந்தச் செயலியை உபயோகித்து இன்புறுங்கள்’ என்பதோடு அந்த அறிவிப்பு முடியும்.

வீட்டு வாசலில் யாரும் வந்திருக்கமாட்டார்கள். ஏனெனில், எந்த உணவும் ‘உண்மையில்’ ஆர்டர் செய்யப்படவில்லை, பணமும் செலுத்தப்படவில்லை. எல்லாமே ஒரு பேச்சுக்குத்தான்.

‘டோபமைன் சைட்ஸ்’ எனப்படும் இத்தகைய இணையப் பக்கங்கள்தாம் தற்போதைய ட்ரெண்ட்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!